ரவிராஜ் கொலை சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

Wednesday, November 4, 2015admin
asath
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்ஜின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட அறுவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு புதுக்கடை பிரதம நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினர் சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள மேலும் மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு மேலதிக நீதவான் நிரோஷா பெர்ணாண்டோ இரகசியப் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 2006 ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் வைத்து ரவிராஜ் கொலை செய்யப்பட்டதுடன், இந்த கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் சுவிஸ்டர்லாந்தில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்தேகநபரை நாடு கடத்துவதற்கு சர்வதேச பொலிஸாரான இண்டப்போலின் உதவியை இலங்கை பொலிஸார் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.