மன்னாரில் 4 ஆயிரம் ஏக்கர் காணியை சுவீகரிக்க இராணுவம் முயற்சி

Wednesday, November 4, 2015admin
asath
மன்னார் சன்னார் பகுதியில் 4 ஆயிரம் ஏக்கர் காணிகளை சட்டரீதீயாக பெற்றுக்கொள்ள இராணுவம் முயற்சித்துவருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மாந்தை மேற்கு சன்னார் பகுதியிலுள்ள இந்த காணிகள் தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில்குளம், சவேரியார்புரம் உட்பட பல கிராமங்களுக்கான குளங்களும் இந்த காணிகளுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னைய அரசாங்க ஆட்சியின் போது வட மாகாணத்தில் பாதுகாப்பு தரப்பினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த பல்லாயிரம் ஏக்கர் காணிகளை நல்லாட்சிக்கான புதிய அரசாங்கம் விடுவிக்கும் என எதிர்பார்ப்பில் காத்திருந்த மக்களுக்கு இந்த நடவடிக்கை ஏமாற்றம் அளித்துள்ளது.