நாடாளுமன்றத்திற்கு அருகிலான இராணுவ பிரசன்னம் குறித்து விசாரணை

Wednesday, November 4, 2015admin
asath
நாடாளுமன்றத்திற்கு அருகில் இராணுவத்தினர் நிலைகொண்டிருந்தமை குறித்து விசாரணை முன்னெடுக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கூட்டு எதிர்கட்சி முன்வைத்த கோரிக்கையை அடுத்து சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு அருகில் இராணுவம் அல்லது பொலிஸாரின் பிரசன்னத்திற்கு தாம் உத்தரவிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆர்பாட்டப் பேரணியை முன்னெடுத்த பல்கலைகழக மாணவர்கள் நாடாளுமன்ற நோக்கி பயணிக்கலாம் என்ற அச்சம் காரணமாக வீதிகள் மூடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திற்கு அருகில் கடுமையான இராணுவ மற்றும் பொலிஸ் பிரசன்னம் இருந்தமை தொடர்பில் மகஜன எக்சத் பெரமுண கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன கேள்வி எழுப்பியிருந்தார். கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பல்கலைகழக மாணவர்கள் ஆர்பாட்டம் நடத்துவதற்கான தடையுத்தரவை பொலிஸார் நீதிமன்றத்திடம் பெற்றிருந்தனர்.