மீனவர் பிரச்சினையில் இலங்கையும் இந்தியாவும் முறுகல்

Wednesday, November 4, 2015admin
asath
மீனவர் பிரச்சினை தொடர்பில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கும் தமது நாட்டு மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறித்து இந்தியா அதிருப்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்படின் தமது நாட்டு கடற்பரப்பில் மீன்பிடிக்கும் இலங்கை மீனவர்களுக்கும் அபராதம் விதிப்பது குறித்து கவனம் செலுத்த வேண்டி ஏற்படலாம் என இந்தியா எச்சரித்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு கருணாநிதியை சந்தித்த மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணையமைச்சர் பொன் இராதகிருஷ்ணன், குடும்பத்தின் திருமண வைபவத்திற்கான அழைப்பையும் விடுத்துள்ளார். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பொன் இராதகிருஷ்ணன் இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடுமையான அபாராதத்தை விதித்தால், அதேவழியில் செயற்படுவது குறித்து இந்தியாவும் சிந்திக்க வேண்டி ஏற்படும் என தெரிவித்துள்ளார்.