TTCயின் பேரூந்து கடத்தப்பட்டு அதன் சாரதி கத்திமுனையில்..

Friday, March 18, 2016admin
asath

இன்று அதிகாலை 12:30 மணியளவில் TTCயின் பேரூந்தொன்று கடத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளதாக York பிராந்தியக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Steeles மேற்கு மற்றும் Martin Grove பகுதியில் வைத்து TTCயின் பேரூந்து கடத்தப்பட்டு அதன் சாரதி கத்திமுனையில் பேரூந்தை நெடுந்தெரு 400 மற்றும் Steeles பகுதியில் அமைந்துள்ள Tim Hortonsக்கு ஓட்டிச் செல்லுமாறு கட்டளையிடப்பட்டுள்ளார்

இந்தச் சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் 31 வயதான ஒருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக எவரும் காயமடையவில்லை