Rob Fordஇன் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக எதிர்வரும் திங்கள்..

Wednesday, March 23, 2016admin
asath

ரொறன்ரோ நகரசபை உறுப்பினர் Rob Ford இன் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ரொறன்ரோ நகரசபையில் வைக்கப்படவுள்ளது

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு நேற்று மரணமடைந்த முன்னாள் நகரபிதா Rob Fordஇன் இறுதிக் கிரிகைகள் குறித்த விபரங்கள் இன்று மாலை குடும்பத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை மதியம் 12 மணிக்கு இறுதிக் கிரிகைகள் நடைபெற்று அவரது பூதவுடல் அடங்கம் செய்யப்படவுள்ளது.

அன்று மாலை Rob Fordஇன் வாழ்க்‌கையைக் கொண்டாடும் வகையிலான நிகழ்வொன்று Toronto Congress Centreரில் நடைபெறவுள்ளது.