Jim Hillyer சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளார்..

Wednesday, March 23, 2016admin
asath

கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் Jim Hillyer தனது ஒட்டாவா அலுவலகத்தில் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளார்.

இவரது மரணத்திற்கு கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ, கொன்சவேட்டிவ் கட்சியின் இடைக்காலத் தலைவி Rona Ambrose மற்றும் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் Thomas Mulcair ஆகியோர் தமது இரங்கல்களை வெளியிட்டுள்ளனர்.

41 வயதான அல்பேட்டாவின் நாடாளுமன்ற உறுப்பினரான இவர் இன்று நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களினாலும் நினைவு கூறப்பட்டுள்ளார்.

இந்த நினைவு கூறலைத் தொடர்ந்த இன்றைய நாடாளுமன்ற அமர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.