Bay மற்றும் Wellingon சந்திப்புக்கு அருகாமையில்..

Sunday, March 20, 2016admin
asath

இன்று அதிகாலை ரொறன்ரோ மத்திய பொருளாதாரப் பகுதியில் நிகழ்ந்த விபத்து குறித்து ஒன்ராரியோ மாகாண விசேட விசாரணைக் குழு விசாரணகளை முன்னெடுக்கின்றது.

Bay மற்றும் Wellingon சந்திப்புக்கு அருகாமையில் அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

ரொறன்ரோ காவல்துறையினர் வாகனம் ஒன்றை நிறுத்த முனைந்தபோது அந்த வாகனம் நிறுத்தாமல் சென்று மற்றுமொரு வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து ஒருவ‌ர் கைதாகியுள்ள நிலையில் குற்றச்சாட்டுக்கள் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.