2015 உலக கிண்ண ரக்பி தொடரில் இருந்து துரதிஷ்டவசமாக வெளியேறியது ஜப்பான்

Monday, October 19, 2015admin
asath
உலக கிண்ண ரக்பி தொடர் ஒன்றில் குழுநிலையில்மூன்று போட்டிகளில் வெற்றிபெற்ற போதிலும் காலியிறுதிக் குதகுதி பெறாமல் வெளியேறும் முதலாவது அணியாக ஜப்பான் பதிவாகியுள்ளது. கிங்சோமில் நடைபெற்ற நான்காவதும் இறுதியுமான குழுநிலைப் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொண்ட ஜப்பான் 28 க்கு 18 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது. பி குழுவில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல்பாதியில் 17 க்கு 8 என்ற புள்ளிகள் கணக்கில் ஜப்பான் முன்னிலை பெற்றிருந்தது இரண்டாவது பாதியிலும் சிறப்பாக செயற்பட்ட ஜப்பான் அணி மேலதிகமாக 11 புள்ளிகளைப் பெற்றதுடன், அமெரிக்க அணியால் 10 புள்ளிகளையே பெற முடிந்தது. போட்டியின் இறுதியில் 28 க்கு 18 என்ற புள்ளிகள் கணக்கில் ஜப்பான் அணி வெற்றிபெற்றது. குழுநிலையில் தனது முதலாவது போட்டியில் பலம் வாய்ந்த தென்னாபிரிக்க அணியை தோற்கடித்து அனைவரினதும் கவனத்தை ஜப்பான் ஈர்த்திருந்தது. இந்த நிலையில் சமோவா மற்றும் அமெரிக்க அணிகளை ஜப்பான் அணி வெற்றிகொண்ட போதிலும் ஸ்கொட்லாந்து அணிக்கெதிரான போட்டியில் அதிகபுள்ளிவித்தியசாத்தில் ஜப்பான் அணி தோல்வி அடைந்திருந்தது. இதன்மூலம் குழுநிலையில் மூன்றாவது இடத்தைப் பெற்ற ஜப்பான் அணி காலிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை தவறவிட்டது. அத்துடன் பி குழுவில் இருந்து ஜப்பானுடன், சமோவா மற்றும் அமெரிக்க அணிகள் உலக கிண்ண ரக்பி தொடரில் இருந்து வெளியேறியதுடன், தென்னாபிரிக்கா மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் காலியிறுதிக்கு தகுதி பெற்றன.