2005ஆம் ஆண்டு நிகழ்ந்த தமிழ் இளைஞரின் கொலையுடன்..

Monday, March 21, 2016admin
asath

2005ஆம் ஆண்டு நிகழ்ந்த தமிழ் இளைஞரின் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டுவரும் 32 வயதான புருஷோத்தமன் நடராஜா என்ற தமிழரை கண்டுபிடிக்க உதவுமாறு ரொறன்ரோ காவல்துறையினர் பொதுமக்களைக் கோரியுள்ளனர்.

ஸ்காபுரோவில் அமைந்துள்ள Spice Land பல்பொருள் அங்காடியில் இருந்து கடத்தப்பட்டு கத்தியால் குத்தப்பட்ட நிலையில் பூங்காவொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட தனுஷன் ஜெயகுமாரன் என்ற இளைஞரின் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இவர் தொடர்ந்தும் தேடப்படுகின்றார்.

இந்தக் கொலை குறித்த குற்றச்சாட்டில் ஏற்கனவே ஜவர் கைது செய்யப்பட்டுள்ளபோதிலும் முதல்நிலை கொலை குற்றவாளியான புருஷோத்தமன் நடராஜா என்ற சந்தேக நபரை கண்டுபிடிக்க உதவுமாறு இன்று ரொறன்ரோ காவல்துறையினர் புதிய கோரிக்கையொன்றை விடுத்துள்ளனர்.

கனடா, இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய இடங்களில் புருஷோத்தமன் நடராஜாவிற்கு குடும்ப தொடர்புகள் இருப்பதாக கூறியுள்ள ரொறன்ரோ காவல்துறையின் தீர்க்கப்படாத கொலை வழக்கு பிரிவின் விசாரணை அதிகாரி, இவர் கொலைக் குற்றச்சாட்டில்தேடப்பட்டு வருகின்றார் என்ற விபரம் சமூக ஊடகங்கள் மூலம் இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிற்கு தெரியப்படுத்தப்படும் என எதிர்பார்ப்பதாவும் தெரிவித்துள்ளார்.