வைத்தியசாலையில் பிறந்த குழந்தையை விட்டு சென்ற தாய் கண்டுபிடிப்பு

Monday, October 19, 2015admin
asath
பிரித்தானியாவில் வைத்தியசாலையொன்றில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை விட்டுச் சென்ற தாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் Harrow பகுதியில் உள்ள Northwick Park வைத்தியசாலையில் Anna Chudy என்ற பெண், மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காலையில் குறித்த பெண்ணுக்கு பூரண ஆரோக்கியத்துடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நிலையில் தன்னுடன் வந்த ஆணொருவருடன் குழந்தையை வைத்தியசாலையில் விட்டு தப்பிச் விட்டு அவர்கள் அங்கிருந்து தப்பியதாக சென்றுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வைத்தியசாலை முழுவதும் தேடிய பின்னரும் அவர்களை கண்டுபிடிக்கப்படாத நிலையில், உடனடியாக வைத்தியசாலை நிர்வாகம் பொலிஸாரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த பொலிஸார் முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் சி.சி.டி.வி கமராவில் பதிந்திருந்த அவர்களது புகைப்படத்தை வெளியிட்டு தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் இன்று காலை பாதுக்காப்பான முறையில் குறித்த பெண்ணை மீட்டுள்ளதாகவும் அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.