வடபகுதி தமிழர்களின் பிரச்சினை குறித்து மோடியிடம் தெரிவிக்கப்படும்

Wednesday, January 13, 2016admin
asath

வடபகுதி தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கமளிக்கப்படவுள்ளது.

இலங்கை;ககு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் எஸ் ஜெய்சங்கர், இன்றைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்த போது இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார்

இலங்கை அரசாங்கத்துடனும் குறுகிய பேச்சுவார்த்தை நடத்தியிருந்த ஜெய்சங்கர், வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ்ஜின் விஜயத்திற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இன்று நடைபெற்ற சந்திப்பில், புதிய அரசியலமைப்பு உருவாக்க நகர்வுள், வடபகுதியில் காணப்படும் இராணுவ பிரசன்னம் மற்றும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வின் தேவை போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

தமிழர்களின் பிரச்சினை குறித்து நரேந்திர மோடிக்கு தெளிவுபடுத்துவதாக இந்திய வெளிவிவகார செயலாளர் எஸ் ஜெய்சங்கர் இதன்போது உறுதி வழங்கியுள்ளார்;.