முழு சூரிய கிரகணம்: இருளில் மூழ்கிய இந்தோனேசியாவின் சில பகுதிகள்!!

Thursday, March 10, 2016admin
asath

முழு சூரிய கிரகணத் தாக்கத்தினால் இந்தோனேசியாவின் சில பகுதிகள் 2 நிமிடங்களுக்கும் மேல் இருளில் மூழ்கியது.

முழு சூரிய கிரகணம் புதன் காலை 5.30 மணி முதல் 9.30 மணி வரை ஏற்பட்டது. இந்த சூரிய கிரகணத்தை உலகின் பல பகுதிகளிலும் மக்கள் கண்டு களித்தனர். இந்த சூரிய கிரகணத்தினால் இந்தோனேசியாவின் சில பகுதிகள் 2 நிமிடங்களுக்கும் மேல் இருளில் மூழ்கியது.

இந்தோனேசியாவின் மத்திய சுலாவேஸி மாகாணத்தின் சிகி பிரோமரு என்ற மலை ஊரில் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர்கூடி 2 நிமிடங்களுக்கும் மேல் சூரியன் முழுதும் மறைந்ததை குதூகலத்துடன் கைதட்டி ஆரவாரமாக ரசித்தனர்.

இந்த முழு சூரிய கிரகணத்தை இந்தோனேசியாவின் சில பகுதிகளிலும் ஆஸ்திரேலியாவிலும் முழுமையாகக் காண முடிந்தது. சென்னையில் காலையில் 6.22 மணி முதல் சில நிமிடங்களுக்கு இந்த சூரிய கிரகணத்தைக் காண முடிந்த்து.

இந்தியாவின் பிற பகுதிகளிலும் பாதி சூரிய கிரகணத்தையே காண முடிந்தது.

இந்தோனேசியாவின் சிகி பிரோமரு ஊரைச் சேர்ந்த ஜுனாஸ் அமிர் கூறும்போது, “சூரியன் முற்றிலும் மறைந்தது. நல்ல சூரிய ஒளி நிரம்பிய இந்தக் காலை வேளையில் திடீரென சூரியன் முழுதும் மறைந்து திடீரென இருளில் மூழ்கியது பார்க்க ஆச்சரியமாக இருந்தது” என்றார்.