முதலாவது வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில்..

Wednesday, March 23, 2016admin
asath

கனடிய பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் வகையில் 100,000 புதிய தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்படுவதாக இன்று தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய நிதியமைச்சர் Bill Morneau கூறியுள்ளார்.

ஜஸ்டின் ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் ஒட்டாவா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

கனடாவின் இந்த வருடத்திற்கான துண்டுவிழும் தொகை 29.4 பில்லியன் டொலர்களாக இருக்கும் எனவும் 2019 மற்றும் 2010ஆம் ஆண்டுகளின் துண்டுவிழும் தொகை 17.7 பில்லியன் டொலர்களாக இருக்கும் எனவும் நிதியமைச்சர் தனது வரவு செலவுத் திட்டத்தில் எதிர்வு கூறியுள்ளார்.

லிபரல் அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் பழங்குடியின மக்கள் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவத்தினருக்காக பெருமளவிலான பணம் ஒதிக்கிடப்பட்டுள்ளது.

இதுதவிர சீரமைக்கப்பட்ட கனடா குழந்தை நலனுக்கான திட்டம் மற்றும் தொழில் காப்பீட்டில் மாற்றங்கள் ஆகியனவும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த வரவு செலவுத் திட்டத்தை பிரதான எதிர்க்கட்சியான கொன்சவேட்டிவ் கட்சியின் இடைக்காலத் தலைவி Rona Ambrose கடுமையாகக் கண்டித்துள்ளார்.