பெல்ஜிய தலைநகரில் புதுவருட கொண்டாட்டங்கள் இரத்து

Wednesday, December 30, 2015admin
asath

பெல்ஜியத் தலைநகர் பிரசல்ஸ்சில் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை காரணமாக புதுவருட கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக பெல்ஜிய பிரதமர் சாள்ர்ஸ் மிச்சேல் குறிப்பிட்டுள்ளார்.

பண்டிகை காலப்பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட சந்தேகத்தின் பேரில் இவ்வார ஆரம்பத்தில் இருவரை பெல்ஜிய பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.

கடந்த நவம்பர் மாதம் பாரிஸ்சில் நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் பெல்ஜியத்தில் பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாரிஸ் தாக்குதலை நடத்தியவர்கள் பெல்ஜியத்தை தளமாக கொண்டே செயற்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு புதுவருடத்தை கொண்டாடுவதில்;லை என அனைவரும் இணைந்து தீர்மானித்திருப்பதாக பிரசல்ஸ் நகர மேயன் தொலைக்காட்சி ஊடாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு புதுவருடத்தை வரவேற்பதற்காக ஒரு இலட்சம் மக்கள் தலைநகர் பிரசல்ஸ்சில் ஒன்று திரண்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.