பிரித்தானியாவில் 48 வருடங்களாக இருந்த பெண்ணை வெளியேறுமாறு எச்சரிக்கை

Monday, October 19, 2015admin
asath
பிரித்தானியாவில் 48 வருடங்களாக வாழ்ந்துவரும் பெண் ஒருவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் தற்போது சட்டவிரோத குடியேறியாக கருதப்படுவதாகவும், அதனால் அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டி ஏற்படலாம் எனவும் பிரித்தானிய உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது. லன்காஷயரில் – பேர்ன்லி என்ற இடத்தை சேர்ந்த வின்னி பேர்க்கின்ஹெட், 1967 இல் மலேஷியாவிலிருந்து தனது தாயுடன், பிரித்தானியாவுக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், அண்மையில் அவருக்கு உள்துறை அமைச்சகத்திலிருந்து கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றது. அதில் ஐக்கிய இராச்சியத்தில் இவர் இருப்பதற்கான அனுமதி காலாவதியடைந்துவிட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவரது குடிவரவு அந்தஷ்தை முறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் விண்ணப்பம் கிடைத்தால், கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அதில் உள்துறை அமைச்சகம் குறிப்பிடப்பட்டுள்ளது. வாகன சாரதி அனுமதி அட்டை, தேசிய சுகாதார சேவை ஆகியவற்றையெல்லாம் தான் எடுத்தபோதுகூட அதிகாரிகள் தனக்கு தெரிவிக்கவில்லை என குறித்த பெண் வினவியுள்ளார். தற்போது பிரித்தானியாவில் நிரந்தரமாக வாழ்வதற்கு அனுமதியளிக்கும் காலவரறையற்ற வதிவிட விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயன்முறை பூர்த்தியடைய 6 மாதங்கள் தொடக்கம் 12 மாதங்கள் வரை செல்லாம் எனவும் இந்தக் காலகட்டத்தில் அவருக்கு வேலை செய்ய அனுமதி இருக்காது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தான் 48 வருடங்களாக பிரித்தானியாவில் வாழ்ந்து வருவதை அதிகாரிகளுக்கு நிரூபிக்கும் முகமாக ஆதாரங்களை திரட்டி வரும் அவர் நண்பர்கள் மற்றும் அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து தனக்கு நிறைய ஆதரவு கிடைப்பதாக கூறியுள்ளார்.