பிரஸ்ஸல்சில் நிகழ்ந்த குண்டுத் தாக்குதல்களைத்

Wednesday, March 23, 2016admin
asath

பிரஸ்ஸல்சில் இன்று காலை நிகழ்ந்த குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து கனடாவின் முக்கிய போக்குவரத்து மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Union புகையிரத நிலையம் உட்பட கனடாவின் பிரதான நகரங்களின் போக்குவரத்து மையங்களில் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

ரொறன்ரோ போக்குவரத்துச் சபை தனது ஊழியர்களை விழிப்புடன் இருக்கமாறு அறிவுறுத்தியுள்ளது.

பிரஸ்ஸல்சிற்கான தமது விமான சேவைகள் சில இரத்துச் செய்யப்படலாம் என Air Canada விமான சேவை அறிவித்துள்ளது.

31பேர் பலியான இன்றைய தாக்குதல்களை கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இந்தத் தாக்குதலில் கனடியர்கள் எவரும் கொல்லப்படவோ அல்லது காயமடையவோ இல்லை என கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரஸ்ஸல்சில் உள்ள கனடியத் துாதரகம், களநிலமை‌களை அவதானித்துவருவதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

பெல்ஜியத்திற்கான பிரயாண எச்சரிக்கைகள் எதுவும் தற்போது விடுக்கப்படவில்லை எனக் கூறியுள்ள வெளிவிவகார அமைச்சு, அங்கு தேன்றியுள்ள பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக பயணம் மேற்கொள்ளும் கனடியர்களை எச்சரிக்கையுடன் இருக்கமாறு அறிவுறுத்தியுள்ளது.