பாரிஸ் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி கொல்லப்பட்டுள்ளார் – பிரான்ஸ்

Thursday, November 19, 2015admin
asath

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ்சில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி அப்தில்ஹமீட் அபராவூத் கொல்லப்பட்டுள்ளதை அந்த நாட்டு வழக்கு தொடுநர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

புhரிஸ்சின் வடக்கு பிராந்தியத்தின் புறநகரான செந்தனீயிலுள்ள தொடர்மாடியொன்றில் பொலிஸார் மேற்கொண்ட ரோந்து நவடிக்கையின் போதே அவர் கொல்லப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சன்னங்கள் மற்றும் உலோக துண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில், அவரின் சடலம் தொடர்மாடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எனினும் சிரியாவிற்கு செல்லும் நோக்குடன் அபராவூத் கிரேக்கத்தை கடந்து சென்றுள்ளமை குறித்து புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாக பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் கூறியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் நோக்குடன் கிரேக்கத்திற்கு வருகைதந்துள்ள ஆயிரக்கணக்கான அகதிகளுடன் அபராவூத்தும் மறைந்துள்ளாரா என்பது இதுவரை தெரியவரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே செந்தனீ நகரிலுள்ள தொடர்மாடியில் பிரான்ஸ் பொலிஸார் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது தற்கொலை குண்டுதாரியான பெண்ஒருவர் குண்டை வெடிக்க வைத்திருந்தார்.

இந்த ரோந்து நடவடிக்கையின் போது மற்றுமொருவர் கொல்லப்பட்டதுடன், எட்டு பேர் வரை கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.