பரபரப்பு ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி!!

Wednesday, March 23, 2016admin
asath

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில், இந்திய அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகளுக்கு 136 ரன்களை எடுத்திருந்தது. களத்தில் மஹமதுல்லாவும், முஸ்தஃபிர் ரஹிமும் இருக்க, பாண்டியா பந்துவீசினார்.

முதல் பந்தில் மஹமதுல்லா 1 ரன் எடுக்க, அடுத்த இரண்டு பந்துகளும் பவுண்டரிக்கு விரைந்தது. ஆட்டம் முடிந்தது, வங்கதேசம் வென்றுவிடும் என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்க, இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை பாண்டிய எடுக்க, ஆட்டம் மீண்டும் பரபரப்பானது.

கடைசி பந்தில் 2 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில், ஷுவகதா ஹோம் எதிர்கொண்டார். பாண்டியா வீசிய பந்து மட்டைக்கு எட்டாமல், ஆஃப் ஸைட் உயர சென்று தோனியின் கைகளில் தஞ்சமடைந்தது. பந்தை அடிக்கவில்லையென்றாலும் ரன் எடுக்க இரண்டு பேட்ஸ்மென்களும் விரைந்தனர். கையில் உறை அணியாமல் இதற்காகவே காத்திருந்த தோனி, பந்தை பிடித்து ஓடி வந்து உடனடியாக ரன் அவுட் செய்தார். இதனால் இந்தியா 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி கண்டது.

சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.