சுவிட்ஸர்லாந்தின் நாடாளுமன்ற பொது தேர்தல் இன்று

Monday, October 19, 2015admin
asath
சுவிட்ஸர்லாந்தின் நாடாளுமன்ற பொது தேர்தல் இன்று நடைபெற்று வருகின்றது. அங்குள்ள 26 மாகாணங்களிலுள்ள வாக்கு நிலையங்களில் பொது மக்கள் காலை முதல் வாக்குகளை பதிவு செய்து வருவதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுவிஸில் சுமார் 82 இலட்சம் மக்கள் உள்ள நிலையில், நாடாளுமன்ற பொது தேர்தல் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது. 246 நாடாளுமன்ற வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக வாக்களிக்கும் நிலையங்கள் மற்றும் இணையத்தளம் மூலம் பொதுமக்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று பிற்பகல் 12 மணியளவில் வாக்களிக்கும் பணிகள் நிறைவடையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிஸின் பெர்ன் நகரில் வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று இன்று மாலை 7 மணி முதல் வெற்றி பெற்ற நாடாளுமன்ற வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படவுள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்புன்படி சுவிஸ் பொதுமக்களிடம் அதிகம் செல்வாக்கு பெற்ற எஸ்விபி எனப்படும் சுவிஸ் மக்கள் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.