ஒரே நாளில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்வோர் ஸ்லோவெனியாவில்

Monday, October 19, 2015admin
asath
புலம்பெயர்வோரின் வருகையை கட்டுப்படுத்துவதற்காக ஹங்கேரி அதன் எல்லையை மூடியதை அடுத்து ஆயிரக்கணக்கானவர்கள் ஸ்லோவெனியாவை நோக்கிச் சென்றுள்ளனர். சுமார் 2 ஆயிரத்து 700 க்கும் அதிகமானவர்கள் ஒரே நாளில் ஸ்லோவெனியாவிற்கு சென்றுள்ளனர். சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிகளவான மக்கள் புலம்பெயர்வோர் ஐரோப்பிய நாடுகளுக்குள் தஞ்சமடைந்து வருகின்றனர். அவர்களை ஏற்பதற்கு ஜேர்மனி மட்டுமே தயாராக இருப்பதால் பலரும் ஜேர்மனியை நோக்கி செல்லும் நிலையில், அவர்கள் ஹங்கேரியின் வழியாக ஜேர்மன் செல்வதால் அவர்களை கட்டுப்படுத்துவதற்காக ஹங்கேரி செர்பியாவுடனான தங்களின் எல்லையை மூடியது. இதனையடுத்து புலம்பெயர்வோர் குரோஷியா வழியாக ஹங்கேரியினூடாக ஜேர்மனியை அடைந்த நிலையில் ஹங்கேரி செர்பியாவுடனான தனது எல்லையையும் தற்போது மூடியுள்ளது. இதன் காரணமாக குரோஷியாவிலுள்ள புலம்பெயர்வோர் ஸ்லோவெனியாவை நோக்கி செல்லும் நிலையில், ஸ்லோவெனியா குரோஷியாவில் இருந்து வரும் புகையிரத சேவையை ரத்து செய்துள்ளது. மேலும் எல்லை பாதுகாப்பு பணியில் பொலிஸாருடன் இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தங்களது எல்லையை மூடப் போவதில்லை என்றும் ஸ்லோவெனியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.