ஐ எஸ் ஆயுததாரிகளை தமது நாடு அழிக்கும் – பிரான்ஸ் ஜனாதிபதி சூளுரை

Monday, November 16, 2015admin
asath

Hollande-ISIS-Parisஐ எஸ் ஆயுததாரிகளை பிரான்ஸ் முற்றாக அழிக்கும் என அந்த நாட்டு ஜனாதிபதி பிரன்சுவா ஒலோன்ட் சூளுரைத்துள்ளார்.

புhரிஸ்சில் நடத்தப்பட்ட தாக்குதல்களை அடுத்து தற்போது நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரநிலைமையை மேலும் நீடிப்பதற்கான பிரேரணையை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அரசியலமைப்பு ரீதியிலான மாற்றங்களுக்கு பரிந்துரைசெய்யவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே ஈராக் மற்றும் சிரியாவில் ஐ எஸ் ஆயுததாரிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை பிரான்ஸ் விமானப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

பிரான்ஸ் தரைநகர் பாரிஸ்சின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஐ எஸ் ஆயுததாரிகள் உரிமை கோரியிருந்தனர்.

அவசர நிலைமையை பிரகடனப்படுத்தாமல் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசியலமைப்பு மாற்றங்கள் அவசியம் என நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் பிரான்ஸ் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஐ எஸ் ஆயுததாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடீமீர் புட்டீன் ஆகியோருடன் எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது எதிர்தரப்பான பஷார் அல் அசாத் சிரியாவில் அதிகாரத்தில் இருக்கின்ற போதிலும் அந்த நாட்டிலுள்ள ஐ எஸ் ஆயுததாரிகளே தமது எதிரி என பிரன்சுவா ஒலோன்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.