உ.கோ.டி20: நியூஸிலாந்து அபார வெற்றி!!

Friday, March 18, 2016admin
asath

தரம்சலாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவை, நியூஸிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-வது வெற்றியைப் பதிவு செய்தது.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்களே எடுத்தது. ஆனால் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 7-வது ஓவரில் 51/1 என்று வலுவாகச் சென்று கொண்டிருந்தது. ஆனால் அதன் பிறகு ஸ்மித், கவாஜா, வார்னர் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 51/1 என்பதிலிருந்து 66/4 என்று ஆனது ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மீண்டும் போட்டிக்குள் வந்ததற்கு சாண்ட்னர், ஐ.எஸ். சோதி ஆகியோரது அபாரப் பந்து வீச்சும் அற்புதமான பீல்டிங்கும் காரணமாகும். கடைசியில் பிடித்த கேட்ச்கள் நெருக்கடி தருணங்களில் கடினமான கேட்ச்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டர் பலவீனம் மீண்டும் வெளிப்பட்டது. இதுதான் அந்த அணியின் மிகப்பெரிய பலவீனம். அதனை நியூஸிலாந்து நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது.