அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்..

Friday, March 18, 2016admin
asath

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் போட்டியில் ஹிலாரி கிளிண்டனும் குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் டொனால்டு டிரம்பும் முன்னிலையில் உள்ளனர்.

அதிபர் வேட்பாளர் தகுதி அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட 3 அடிப்படை தகுதிகள் அவசியம். அந்த நாட்டின் சட்டபூர்வ குடிமகனாகப் பிறந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் 35 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அமெரிக்காவில் 14 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும்.

இவை அடிப்படை விதியாக இருந்தாலும் அவ்வளவு எளிதாக யாரும் அதிபர் வேட்பாளராக முடியாது. அந்த நாட்டின் எழுதப்படாத சட்டத்தின்படி, மாகாண ஆளுநர்கள், செனட்டர்கள், ஐந்து நட்சத்திர அந்தஸ்துடைய ராணுவ தளபதிகள் அல்லது மெகா கோடீஸ்வர அரசியல் தலைவர்களே அதிபர் வேட்பாளராக போட்டியிட முடியும்.

டிரம்பா, குரூஸா? குடியரசு கட்சியில் மெகா கோடீஸ்வர தொழிலதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் உள்ளார். அவர் 621 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்து டெக்சாஸ் செனட்டர் டெட் குரூஸ் 396 வாக்கு களைப் பெற்றுள்ளார்.

குடியரசு கட்சியில் அதிபர் வேட் பாளராக 1237 பிரதிநிதிகள் வாக்கு களைப் பெற வேண்டும். அந்த கட்சி தரப்பில் இன்னமும் 21 மாகாணங்களில் உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதில் வெற்றி பெறுவது டிரம்பா, குரூஸா என்பது ஜூன் இறுதிக்குள் தெரிந்துவிடும்.

இதைத் தொடர்ந்து ஜூலையில் இருகட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். அதன் பின்னரே அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடுபிடிக்கும்.