அடிப்படை ஊதியம் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி முதல் 15 சதத்தினால் அதிகரிக்கின்றது..

Friday, March 18, 2016admin
asath

ஒன்ராரியோ மாகாணத்தில் அடிப்படை ஊதியம் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி முதல் 15 சதத்தினால் அதிகரிக்கின்றது.

தற்போது மணித்தியாலம் ஒன்றிக்கு 11 டொலர் 25 சதமாகவுள்ள அடிப்படை ஊதியம் இந்த அதிகரிப்புடன் 11 டொலர் 40 சதமாகின்றது.

இந்த அதிகரிப்பின் மூலம் கனடாவின் அதிகூடிய அடிப்படை ஊதியத்தை கொண்ட மாகாணமாக தொடர்ந்தும் ஒன்ராரியோ மாகாணம் அமையவுள்ளது.

2003ஆம் ஆண்டு முதல் இதுவரை ஒன்ராரியோ மாகாணத்தில் அடிப்படை ஊதியம் ஒன்பது தடவைகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது