ஃபேஸ்புக்கில் இனி வீடியோ வடிவில் பிறந்த நாள் வாழ்த்து!!

Monday, February 29, 2016admin
asath

ஃபேஸ்புக்கில் இனி வீடியோ வடிவில் நண்பர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கலாம். அதற்கான வசதியை ஃபேஸ்புக் தனது செயலியில் அறிமுகம் செய்திருக்கிறது.

ஃபேஸ்புக் பயனாளிகள் நண்பர்களின் பிறந்த தினத்தின் போது, வாழ்த்து தெரிவிக்க நினைவூட்டப்படுவதை அடிக்கடி எதிர்கொண்டிருக்கலாம். நண்பர்களின் பிறந்த தினத்தை நாம் மறந்தாலும் ஃபேஸ்புக் மறக்காமல் பயனாளிகளின் சுவர் பகுதியில் நினைவூட்டும். இப்போது இந்த நினைவூட்டலோடு வீடியோ வடிவில் வாழ்த்து சொல்லும் வசதியையும் ஃபேஸ்புக் உருவாக்கியுள்ளது. ‘பர்த்டேவீடியோகேம்’ எனும் பெயரிலான இந்த வசதியில், 15 நொடி வீடியோவை உருவாக்கி பிறந்த நாள் வாழ்த்துப் பாடலாம்.

பிறந்த நாள் நினைவூட்டல் செய்தியின் கீழே, பிறந்த நாள் வீடியோவைப் பதிவு செய்க எனும் குறிப்பும் இடம்பெற்றிருக்கும். முதலில் ஐ.ஒ.எஸ். கைபேசிகளுக்காக‌ இந்தச் செயலி அறிமுகமாகிறது. ஆண்ட்ராய்டு உள்ளிட்டவற்றில் விரைவில் இணைக்க‌ப்பட உள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம், வீடியோ சார்ந்த சேவையில் தற்போது தீவிரமாகக் கவனம் செலுத்திவருகிறது. அதன் ஓர் அங்கமாகப் பிறந்த நாள் வாழ்த்து வீடியோ வசதி அமைவதாகக் கருதப் படுகிறது