நீண்டகாலப் பொதுப் போக்குவரத்துக் குறித்து ஆராயும் ரொறன்ரோ நகரசபையின்..

Thursday, March 31, 2016admin
asath

நீண்டகாலப் பொதுப் போக்குவரத்துக் குறித்து ஆராயும் ரொறன்ரோ நகரசபையின் கூட்டம் தற்போது ரொறன்ரோ நகரசபையில் நடைபெறுகின்றது.

இன்று .பின்னிரவு 11 மணிவரை இந்தத் கூட்டம் ரொறன்ரோ நகரசபையில் தொடர்ந்தும் நடைபெறவுள்ளது.

இன்றும் நாளையும் நடைபெறும் இந்த நகரசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் 15 வருடகால போக்குவரத்து திட்டம் குறித்து விவாதிக்கப்படுகின்றது.

ரொறன்ரோ நகரபிதா ஜோன் ரோரியின் நிர்வாக குழு தற்போது விவாதிக்கப்படும் போக்குவரத்து திட்டத்தை ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளது.

சிரியாவின் அகதிகளை கனடாவுக்கு தனிப்பட்ட முறையில்..

Thursday, March 31, 2016admin
asath

தொடரும் பொதுமக்களின் கண்டனங்களின் எதிரொலியாக சிரியாவின் அகதிகளை கனடாவுக்கு தனிப்பட்ட முறையில் வரவழைக்கும் திட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கனடாவின் குடிவரவுத்துறை அமைச்சு இன்று முதல் இந்த மாற்றங்களை மேற்கொள்கின்றது.

இந்த வருடத்தின் இறுதிக்குள் மேலதிகமாக 10 ஆயிரிம் சிரிய நாட்டின் அகதிகளை கனடாவுக்குள் வரவழைக்கும் வகையில் இந்தத் திட்டமாற்றம் அமையவுள்ளது.

ரோப் போட்டின் மறைவின் பின்னர் இன்று முதலாவது தடவையாக..

Thursday, March 31, 2016admin
asath

ரோப் போட்டின் மறைவின் பின்னர் இன்று முதலாவது தடவையாகக் கூடிய ரொறன்ரோ நகரசபை உறுப்பினர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இன்றைய கூட்டத்தை ஆரம்பித்து பேசிய நகரபிதா ஜோன் ரோரி,ரோப் போட்டின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கும் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.

இதன் பின்னர் பல நகரசபை உறுப்பினர்களுக்கு ரோப் போட்டிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உரை நிகழ்ந்தினர்

இதேவேளை ரோப் போட்டின் பதவி வெற்றிடத்தை எவ்வாறு நிரப்புவது என்பது குறித்து உடனடியாக தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படாது என நகரபிதா அலுவலகம் தெரிவிக்கின்றது.

அமெரிக்கா வர்த்தக சம்மேளனத்தில் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ..

Thursday, March 31, 2016admin
asath

எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை மனதில் கொண்டே அமெரிக்க வாக்காளர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என கனடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ கூறியுள்ளார்.

இன்று காலை அமெரிக்கா வர்த்தக சம்மேளனத்தில் உரையாற்றியபோது ஜஸ்டின் ரூடோ இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவின் வாசிங்டனில் இன்றும் நாளையும் நடைபெறும் அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்கான பிரதமர் ரூடோ அமெரிக்கா பயணமாகிவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Woodstock நகரின் உணவகம் ஒன்றின் தீ வைப்பு குறித்த..

Thursday, March 31, 2016admin
asath

Woodstock நகரின் உணவகம் ஒன்றின் தீ வைப்பு குறித்த குற்றச்சாட்டில் இலங்கைத் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ஜெயகுமார் சண்முகநாதன் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தீ வைக்க சதி முயற்சி மேற்கொண்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை எதிர்கொள்ள 2011ஆம் ஆண்டு நீதிமன்ற விசாரணைக்கு சமூகமளிக்கத் தவறிய நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து கனடா திரும்பியவேளை இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இவர் ரொறன்ரோ Pearson சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

8 வயது சிறுவன் ஒருவனைத் தாக்கிய நாய்..

Thursday, March 31, 2016admin
asath

8 வயது சிறுவன் ஒருவனைத் தாக்கிய நாய் ஒன்று காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நேற்றிரவு நிகழ்ந்துள்ளது.

நெடுந்‌தெரு 401 மற்றும் Morningside சந்திப்புக்கு அருகாமையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிசிக்சை வழங்கப்பட்ட பின்னர் வீடு திரும்பியுள்ளான்.

North Yorkகில் இன்று காலை வாகனத்தால் மோதப்பட்ட பெண்..

Thursday, March 31, 2016admin
asath

North Yorkகில் இன்று காலை வாகனத்தால் மோதப்பட்ட பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

வீதியைக் கடக்க முயன்ற 76 வயதான பெண் ஒருவரே வாகனத்தால் மோதப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இவர் சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் மரணமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Scarborough-Rough River தொகுதியின் இடைத் தேர்தலில்..

Wednesday, March 23, 2016admin
asath

வெற்றிடமாகியுள்ள Scarborough-Rough River தொகுதியின் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பத்தை இரண்டு தமிழர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆளும் மாகாண லிபரல் கட்சியின் சார்பில் வேட்பாளர் போட்டியில் ஈடுபடவுள்ளதாக பிரகால் திரு கட்சியின் தலைமையிடம் அறிவித்துள்ளார்.

புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் இந்தத் தொகுதியில் போட்டியிடும் எண்ணத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் வெளிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை கொன்சவேட்டிவ் கட்சியும் தமிழ் வேட்பாளர் ஒருவரையே இந்தத் தொகுதியில் நிறுத்தும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாகாணசபை உறுப்பினர் Bas Balkissoonனின் பதவி விலகல் அறிவித்தல் மூலம் வெற்றிடமாகியுள்ள இந்தத் தொகுதிக்கான இடைத் தேர்தலை 6 மாத காலத்தில் அறிவிக்கவேண்டிய நிலை முதல்வர் Kathleen Wynneக்கு ஏற்பட்டுள்ளது

உறைபனி எச்சரிக்கை நாளையும் நீடிக்கப்பட்டுள்ளது..

Wednesday, March 23, 2016admin
asath

கனடா சுற்றுச்சூழல் அமைப்பினால் ரொறன்ரோ பெரும்பாகத்திற்கு இன்று விடுக்கப்பட்டிருந்த உறைபனி எச்சரிக்கை நாளையும் நீடிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் ரொறன்ரோ பெரும்பாகத்தில் 5 முதல் 15 mm வரையிலான உறைபனிக்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காலநிலையின் எதிரொலியாக மின் தடைகள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் நாளை காலை போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க தாமதங்கள் எதிர்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மின்தடைகளை எதிர்கொள்ளும் வகையில் தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளதாக Toronto Hydro இன்று மாலை அறிவித்துள்ளது.

ரொறன்ரோ தவிர Halton, Peel, Hamilton, தெற்குYork மற்றும் Durham ஆகிய பிரதேசங்களையும் கனடா சுற்றுச்சூழல் அமைப்பின் உறைபனி எச்சரிக்கை உள்ளடக்கியுள்ளது

கனடா ISIS இஸ்லாமி தீவிரவாத அமைப்புடன் இல்லை..

Wednesday, March 23, 2016admin
asath

கனடா ISIS இஸ்லாமி தீவிரவாத அமைப்புடன் தற்போது யுத்தத்தில் ஈடுபட்டிருக்கவில்லை என கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளர்.

இன்று CBC வானொலிக்கு வழங்கிய செவ்வியொன்றில் இந்தக் கருத்தை கனடிய பிரதமர் வெளியிட்டுள்ளார்.

கனடிய பிரதமரின் இந்தக் கருத‌்தை ஆமோதிக்கும் வகையில் கனடாவின் வெளிவிவகார அமைச்சர் Stephane Dion இன்று நாடாளுமன்ற வளாகத்தில் கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.