கம்ப்யூட்டர் அறிவியல் சார்ந்த வீடியோக்கள்!!!

Friday, April 1, 2016admin
asath

இணையத்தில் கல்வி சார்ந்த மற்றும் அறிவியல் சார்ந்த வீடியோக்கள் கொட்டிக் கிடக்கின்றன என்பது தெரிந்த விஷயம்தான். இவற்றைத் தேடித்தரும் தளங்களும் இருக்கின்றன. இதே போல கம்ப்யூட்டர் அறிவியல் சார்ந்த வீடியோக்கள் மற்றும் காட்சி விளக்கங்களைக் காண விரும்பினால் அவற்றைத் தேடி அலையாமல் ஒரே இடத்தில் தொகுத்து அளிக்கிறது ‘சி.எஸ்.வீடியோலெக்சர்ஸ்’ இணையதளம்.

பல்கலைக்கழகங்கள் போன்ற அமைப்புகளில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோக்களை இதில் பார்க்கலாம். அல்காரிதம், கம்ப்யூட்டர் சிஸ்டம், டேட்டா, செயற்கை அறிவு எனப் பலவித பதங்கள் தொடர்பான வீடியோக்கள், காட்சி விளக்கங்கள், பிடிஎஃப் வழிகாட்டிகள் ஆகியவற்றைக் காணலாம். கம்ப்யூட்டர் அறிவியல் தொடர்பான பாடத் திட்டங்களைத் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு அதிகம் பயனுள்ளதாக இருக்கும்.

இணைய முகவரி: http://csvideolectures.com/

வினாடி வினா தளம்!!

Friday, April 1, 2016admin
asath

நீங்கள் விரும்பியது போல இணைய வாக்கெடுப்பு நடத்த வழிசெய்யும் இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன. ஒற்றைக் கேள்வி கேட்டு, அதற்கான பதிலைப் பெற, பலவிதமான‌ வாய்ப்புகளை இந்தத் தளங்கள் மூலம் அளிக்கலாம். இதேபோல வரிசையாகப் பல கேள்விகளைக் கேட்க விரும்பினால், அதாவது நீங்களே இணைய வினாடி வினா நடத்த விரும்பினால் ‘குவிஸி’ இணையதளம் அதற்கு வழிகாட்டுகிறது.

வினாடி வினா நடத்த விரும்புகிறவர்கள் இந்தத் தளத்தில் உறுப்பினராகப் பதிவு செய்துகொண்டு, தங்களுக்கான கேள்விகளையும் அவற்றுக்கான பதில் தேர்வுகளையும் குறிப்பிடலாம். இதன் பிறகு இணையம் மூலமே வினாடி வினா நடத்தலாம்.

மேலும் அறிய: https://www.quizzy.rocks/

மனிதர்களுக்கு இயந்திரங்கள் போட்டி இல்லை: மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெள்ளா கருத்து!!

Friday, April 1, 2016admin
asath

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டம் சான்பிரான் சிஸ்கோவில் நடைபெற்றது. இதில் அந்நிறுவன தலைமை செயல் அதி காரியும் (சிஇஓ) இந்தியருமான சத்ய நாதெள்ளா பேசியதாவது:

நாள்தோறும் தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், மனிதனின் மொழி களை கணினிகளுக்கு கற்றுக் கொடுப்பதுடன் நம்மைப் போல பொதுமக்களுடன் உரையாடவும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

இதற்காக நம்மைச் சுற்றி நடக் கும் நிகழ்வுகளை கணினிகளுக் குள் புகுத்த வேண்டும். அதேநேரம் சிறந்த மனிதத்தன்மை கொண்ட மதிப்புமிக்க தொழில்நுட்பத்தை உருவாக்க நிறுவனங்கள் முன் வர வேண்டும். மோசமான மனிதத் தன்மை கொண்ட தொழில்நுட் பத்தை உருவாக்கக் கூடாது.

இதன்மூலம் வருங்காலத்தில் கணினிகள் மனிதர்களுக்கு போட் டியாக உருவெடுத்துவிடும் என்று எண்ணத் தேவையில்லை. மனிதர் களின் அன்றாட பணிகளுக்கு மிக வும் உறுதுணையாகவே இருக் கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

லைஃப் பேக்!!

Thursday, March 10, 2016admin
asath

மிகச் சிறந்த தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பேக்கில் சூரிய சக்தி மூலம் யுஎஸ்பி சார்ஜர் செய்யலாம்.

புளூடூத் ஸ்பீக்கர், மேம்படுத்தப்பட்ட லாக்கர் ஆகியவை இருக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது. துணிகள், லேப்டாப் மற்ற பொருட்கள் வைப்பதற்கு தனித் தனியே இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பது கூடுதல் அம்சம்.

360 டிகிரி ஸ்கேனர்!!

Thursday, March 10, 2016admin
asath

360 டிகிரியும் சுழன்று மிகத் தெளிவாக ஸ்கேனிங் செய்யக்கூடிய திறன் கொண்டது.

ஆளில்லா இடங்களில் என்ன இருக்கிறது என்பதை தெளிவாகத் தெரிந்து கொள்ள பயன்படுத்த முடியும். 40 மீட்டர் சுற்றளவு வரை ஸ்கேனிங் செய்யக்கூடியது.

ரோபோக்களில் இது பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

ஸ்மார்ட் தெர்மாமீட்டர்!!

Thursday, March 10, 2016admin
asath

இந்த மிகச் சிறிய வடிவிலான தெர்மாமீட்டரை புளூடூத் வழியாக ஸ்மார்ட்போனுடன் இணைத்துக் கொள்ளவேண்டும்.

வெப்பத்தை அறிய உடலின் அருகில் வைக்கும் பொழுது மிகவும் வெப்பமாக இருந்தால் சிவப்பு நிறத்திலும், உடலின் வெப்பம் சமநிலையில் இருந்தால் பச்சை நிறத்திலும், வெப்பம் குறைவாக இருந்தால் வெள்ளை நிறத்திலும் எல்இடி விளக்கு எரிகிறது.

எவ்வளவு வெப்பம் என்பதை ஸ்மார்ட்போனில் பார்த்துக் கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

தானாக இயங்கும் கூகுள் கார் கூகுள் கார்!!

Wednesday, March 2, 2016admin
asath

டிரைவர் இல்லாமல் தானாக இயங்கும் கூகுள் கார், பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.

கூகுள் நிறுவனம் சார்பில் டிரைவர் இல்லாமல் தானாக இயங்கக்கூடிய கார் வடிவமைக்கப் பட்டு கடந்த ஓராண்டுக்கும் மேலாக சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சுமார் 23 கார்கள் சோதனை ஓட்டத்தில் உள்ளன.

கலிபோர்னியா மாகாணம், மவுன்ட் ஹில் பகுதியில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி கூகுள் கார் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது சாலையோரம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள் மீது ஏறாமல் இருக்க கார் ஒதுங்கி சென்றது.

இதில் அதே சாலையில் சென்று கொண்டிருந்த பஸ்ஸின் பக்கவாட்டில் கூகுள் கார் மோதியது. இதில் பஸ்ஸுக்கும் காருக்கும் சிறிது சேதம் ஏற்பட்டது.

சோதனை ஓட்டத்தின்போது கூகுள் தானியங்கி கார்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றன. கடந்த 2015 ஜூலை முதல் இதுவரை 14 விபத்துகள் நேரிட்டுள்ளன. இதுகுறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவறுகளை திருத்தி வருகிறோம், இனிமேல் விபத்துகள் நேரிடாத வகையில் கூகுள் தானியங்கி காரின் சாப்ட்வேர் மாற்றியமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக்கில் இனி வீடியோ வடிவில் பிறந்த நாள் வாழ்த்து!!

Monday, February 29, 2016admin
asath

ஃபேஸ்புக்கில் இனி வீடியோ வடிவில் நண்பர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கலாம். அதற்கான வசதியை ஃபேஸ்புக் தனது செயலியில் அறிமுகம் செய்திருக்கிறது.

ஃபேஸ்புக் பயனாளிகள் நண்பர்களின் பிறந்த தினத்தின் போது, வாழ்த்து தெரிவிக்க நினைவூட்டப்படுவதை அடிக்கடி எதிர்கொண்டிருக்கலாம். நண்பர்களின் பிறந்த தினத்தை நாம் மறந்தாலும் ஃபேஸ்புக் மறக்காமல் பயனாளிகளின் சுவர் பகுதியில் நினைவூட்டும். இப்போது இந்த நினைவூட்டலோடு வீடியோ வடிவில் வாழ்த்து சொல்லும் வசதியையும் ஃபேஸ்புக் உருவாக்கியுள்ளது. ‘பர்த்டேவீடியோகேம்’ எனும் பெயரிலான இந்த வசதியில், 15 நொடி வீடியோவை உருவாக்கி பிறந்த நாள் வாழ்த்துப் பாடலாம்.

பிறந்த நாள் நினைவூட்டல் செய்தியின் கீழே, பிறந்த நாள் வீடியோவைப் பதிவு செய்க எனும் குறிப்பும் இடம்பெற்றிருக்கும். முதலில் ஐ.ஒ.எஸ். கைபேசிகளுக்காக‌ இந்தச் செயலி அறிமுகமாகிறது. ஆண்ட்ராய்டு உள்ளிட்டவற்றில் விரைவில் இணைக்க‌ப்பட உள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம், வீடியோ சார்ந்த சேவையில் தற்போது தீவிரமாகக் கவனம் செலுத்திவருகிறது. அதன் ஓர் அங்கமாகப் பிறந்த நாள் வாழ்த்து வீடியோ வசதி அமைவதாகக் கருதப் படுகிறது

பேப்பர்-பேனா-இல்லாமல்-ஈஸி-நோட்ஸ்!!

Monday, February 29, 2016admin
asath

காகிதமும் இல்லாமல், பேனாவும் இல்லாமல் குறிப்பெடுக்க முடிந்தால் எப்படி இருக்கும்? அந்தக் குறிப்புகளை ஒரே இடத்தில் தொகுத்து வைத்துக்கொள்ளவும், தேவை எனில் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் முடிந்தால் எப்படி இருக்கும்?

இந்த இரண்டையும் ‘பின்சைடு’ இணையச் சேவை சாத்தியமாக்குகிறது. இன்னும் பலவற்றையும் சாத்தியமாக்கும் ஆற்றலையும் அது பெற்றிருக்கிறது.

வடிவமைப்பு, தோற்றம் ஆகிய இரண்டிலுமே எளிமையாக இருக்கும் பின்சைடு பயன்படுத்தவும் எளிதாக இருக்கிறது. எளிமையை மீறி அதன் பயன்பாடு எல்லையில்லாமல் விரிவதுதான் ஆச்சரியம்.

சரி, பின்சைடு மூலம் என்ன செய்யலாம்?

அடிப்படையில் பின்சைடு ஓர் இணையப் பலகை. அதாவது இணையக் குறிப்பேடு என்று வைத்துக்கொள்ளலாம்.

உள்ளங்கை அளவு மஞ்சள் வண்ணக் காகிதத்தில் குறிப்பெழுதி அலுவலக மேஜை முன் ஒட்டி வைத்துக்கொள்வது உண்டல்லவா? அது போலவே பின்சைடு தளத்தில் நமக்கான குறிப்புச்சீட்டை உருவாக்கிக்கொள்ளலாம். இந்தச் சீட்டில் செய்ய வேண்டியது, நினைவில் கொள்ள வேண்டியது என எதை வேண்டுமானாலும் குறித்து வைக்கலாம்.

குறிப்புச் சீட்டுகளைப் பெற பின்சைடு தளத்தில் உறுப்பினராகச் சேர்ந்தாலே போதும். உறுப்பினராக இணைவதற்கு முன் இந்தச் சேவையை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என முன்னோட்டம் பார்க்கும் வசதியும் அளிக்கப்படுகிறது. இதற்காக ‘டெமோ போர்ட்’ எனும் விளக்கப் பலகை நம் முன் வைக்கப்படுகிறது.

விளக்கப் பலகை கரும் பலகை போல வெறுமையாக இருந்தாலும் அதில் இடது பக்கத்தின் மேலே உள்ள, புதிய குறிப்புக்கான பகுதியை ‘கிளிக்’ செய்ததுமே, கரும்பலகையில் மஞ்சள் வண்ணக் குறிப்புச்சீட்டு தோன்றுகிறது. மனதில் உள்ளதை அதில் ‘டைப்’ செய்யலாம். தேவையெனில் ஒளிப்படமும் இணைக்கலாம். அவ்வளவுதான் குறிப்புச்சீட்டைத் தயார் செய்தாகிவிட்டது.

இனி இந்தச் சீட்டை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். இல்லையெனில் உங்களுக்கு மட்டுமே வைத்துக்கொள்ளலாம். இதில் வெறும் நினைவூட்டலை எழுதி வைக்கலாம். அல்லது செய்ய வேண்டிய செயல்களைப் பட்டியல் போட்டுக்கொள்ளலாம். பார்க்க வேண்டிய படங்கள், படிக்க வேண்டிய புத்தகங்கள் என நீங்கள் விரும்பும் எதையும் குறித்து வைத்துக்கொள்ளலாம்.

இப்படி எத்தனை குறிப்புகளை வேண்டுமானாலும் உருவாக்கலாம். குறிப்புச் சீட்டுகளைக் கரும்பலகையில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் கொண்டு போய் வைக்கலாம். அவற்றுக்கான நோக்கம் நிறைவேறிவிட்டால் குறிப்புகளை நீக்கிவிடலாம்.

தனிப்பட்ட முறையில் பயன்படுத்த நினைத்தால், இதை உங்க‌ளுக்கான இணையப் பலகையாகக் கருதிக்கொள்ளலாம். சந்திப்புகளுக்கான கூட்டங்களை நினைவில் கொள்வது முதல் இன்று மாலை வாங்கி வர வேண்டிய மளிகை சாமான்கள் வரை எதற்காக வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். இணையத்தில் பார்க்கும் பயனுள்ள இணையதளங்களையும் கூட இப்படி ‘புக்மார்க்’ செய்துகொள்ளலாம்.

பகிர்தலுக்கான விஷயங்கள் என்றால் இந்தக் குறிப்பேட்டை நண்பர்களுடனும் கூடப் பகிர்ந்து கொள்ளலாம். நிகழ்ச்சிக்கு ஒன்றாகத் திட்டமிடுவது அல்லது அலுவலகப் பணி பற்றி விவாதிப்பது போன்றவற்றுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். குடும்பத்தினர் அல்லது உறவினர்களுடன் சேர்ந்து விடுமுறைக் காலப் பயணத்தையும் திட்டமிடலாம். நண்பர்கள் இதிலேயே ‘எடிட்’ செய்து கருத்து தெரிவிக்கலாம்.

பொதுக் கருத்து என்றால் உலகுடன் பகிர்ந்து கொள்ளவும் இந்தப் பலகையைப் பயன்படுத்தலாம். மாற்றங்களுக்கான எண்ணங்களை வெளியிட்டு ஆதரவு திரட்டவும் இது ஏற்றதாக இருக்கும். வலைப்பதிவு தொடங்குவதைச் சுமையாக நினைத்தால், எளிதாக இதில் எளிதாக எண்ணங்களைப் பதிவுசெய்து அந்தப் பக்கத்தை உலகின் பார்வைக்குச் சமர்ப்பிக்கலாம். மாணவர்களுக்கும் இது ஏற்றதே.

இந்தச் சேவையை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்பது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. புக்மார்க் செய்து கொண்டு, முயன்று பாருங்கள்: http://pinsi.de/index.php

சிரிக்க, அழுதிட, கோபப்பட.. – 6 அம்ச ஃபேஸ்புக் லைக் பட்டன்!!

Monday, February 29, 2016admin
asath

அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில், லைக் பட்டனோடு சேர்த்து புதிய பட்டன்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. லவ், ஹா ஹா, வாவ், ஸாட், ஆங்க்ரி என கூடுதலாக 5 விருப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

ஃபேஸ்புக்கில் நண்பர்கள் பகிரும் பதிவுகளுக்கும், படங்கள் மற்றும் வீடியோக்களுக்கும் பின்னூட்டம் இடும் வசதியும், விரும்பும் (லைக்) வசதியும் இதுவரை இருந்துவந்தது. நீண்ட காலமாக, பிடிக்காத பதிவுகளுக்கு அன்லைக் (விரும்பவில்லை) என்ற பட்டனை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்த வேண்டும் என பல பயனர்கள் கோரி வருகின்றனர்.

தற்போது இதற்கு மாற்றாக, லைக் பட்டனோடு சேர்த்து இன்னும் 5 தேர்வுகளை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் குறியீடுகளாக தம்ஸ் அப் வடிவம், இதய வடிவம், வாய்விட்டு சிரிக்கும் ஸ்மைலி, ஆச்சரியமாகப் பார்க்கும் ஸ்மைலி, சோகமான ஸ்மைலி மற்றும் கோபமான ஸ்மைலி ஆகியவை தரப்பட்டுள்ளன. இப்போது மொத்தம் 6 அம்சங்கள் இப்போது.

வழக்கமாக இருக்கும் லைக் பட்டன் மேல் மவுஸை எடுத்துச் சென்றால் இந்த தேர்வுகள் தோன்றும். வேண்டியதை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த புதிய அம்சத்துக்கு பேஸ்புக் பயனர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.