ஜேர்மனியில் குடியேற்றவாசிகள் தொடர்பான சட்டங்களை கடுமையாக நடவடிக்கை

Saturday, January 9, 2016admin
asath

ஜேர்மன் அதிபர் ஏங்கலா மேர்கல் குடியேற்றவாசிகள் தொடர்பான கடுமையான சட்டங்களை முன்மொழிந்துள்ளார்.

குற்றமிழைப்பவர்களை இலகுவாக நாடு கடத்தும் வகையில் இந்த முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

புதுவருடத்திற்கு முன்னதாக கொலோன்ஜே பகுதியில் 50 க்கும் அதிகமான பெண்கள் மீது பாலியல் ரீதியான தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்;ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வட ஆபிரிக்கா மற்றும் அரபு நாடுகளைச் சேர்ந்தவர்களே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன் அகதிகளை வரவேற்கும் ஏங்கலா மேர்கலின் கொள்கை குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த சம்பவத்தை பொலிஸார் கையாளும் விதம் தொடர்பிலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கொலோன்ஜே பகுதியில் நடத்தப்பட்ட குடியேற்றத்திற்கு எதிரான ஆர்பாட்டங்களின் போது மோதல்கள் ஏற்பட்டதாக ஜேர்மன் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

பெல்ஜிய தலைநகரில் புதுவருட கொண்டாட்டங்கள் இரத்து

Wednesday, December 30, 2015admin
asath

பெல்ஜியத் தலைநகர் பிரசல்ஸ்சில் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை காரணமாக புதுவருட கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக பெல்ஜிய பிரதமர் சாள்ர்ஸ் மிச்சேல் குறிப்பிட்டுள்ளார்.

பண்டிகை காலப்பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட சந்தேகத்தின் பேரில் இவ்வார ஆரம்பத்தில் இருவரை பெல்ஜிய பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.

கடந்த நவம்பர் மாதம் பாரிஸ்சில் நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் பெல்ஜியத்தில் பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாரிஸ் தாக்குதலை நடத்தியவர்கள் பெல்ஜியத்தை தளமாக கொண்டே செயற்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு புதுவருடத்தை கொண்டாடுவதில்;லை என அனைவரும் இணைந்து தீர்மானித்திருப்பதாக பிரசல்ஸ் நகர மேயன் தொலைக்காட்சி ஊடாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு புதுவருடத்தை வரவேற்பதற்காக ஒரு இலட்சம் மக்கள் தலைநகர் பிரசல்ஸ்சில் ஒன்று திரண்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாரிஸ் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி கொல்லப்பட்டுள்ளார் – பிரான்ஸ்

Thursday, November 19, 2015admin
asath

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ்சில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி அப்தில்ஹமீட் அபராவூத் கொல்லப்பட்டுள்ளதை அந்த நாட்டு வழக்கு தொடுநர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

புhரிஸ்சின் வடக்கு பிராந்தியத்தின் புறநகரான செந்தனீயிலுள்ள தொடர்மாடியொன்றில் பொலிஸார் மேற்கொண்ட ரோந்து நவடிக்கையின் போதே அவர் கொல்லப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சன்னங்கள் மற்றும் உலோக துண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில், அவரின் சடலம் தொடர்மாடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எனினும் சிரியாவிற்கு செல்லும் நோக்குடன் அபராவூத் கிரேக்கத்தை கடந்து சென்றுள்ளமை குறித்து புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாக பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் கூறியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் நோக்குடன் கிரேக்கத்திற்கு வருகைதந்துள்ள ஆயிரக்கணக்கான அகதிகளுடன் அபராவூத்தும் மறைந்துள்ளாரா என்பது இதுவரை தெரியவரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே செந்தனீ நகரிலுள்ள தொடர்மாடியில் பிரான்ஸ் பொலிஸார் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது தற்கொலை குண்டுதாரியான பெண்ஒருவர் குண்டை வெடிக்க வைத்திருந்தார்.

இந்த ரோந்து நடவடிக்கையின் போது மற்றுமொருவர் கொல்லப்பட்டதுடன், எட்டு பேர் வரை கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாரிஸ் தாக்குதலை நடத்திய ஆயுததாரிகள் பயன்படுத்திய பகுதிகளில் தேடுதல்

Tuesday, November 17, 2015admin
asath

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ்சில் தாக்குதல்களை நடத்திய ஆயுததாரிகள் பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பகுதிகளில் அந்த நாட்டு பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த தாக்குதலின் பிரதான சந்தேகநபராக கருதப்படும் சலாஹ் அப்டிஸ்லாம் என்ற இளைஞர் காரொன்றை வாடகைக்கு பெற்றிருந்ததாக பிரான்ஸ் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கை சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

குறித்த இளைஞரும் மற்றுமொரு தாக்குதல்தாரியான அவரின் சகோதரரும் தொடர்மாடியொன்றையும் இரண்டு ஹோட்டல் அறைகளையும் வாடகைக்கு எடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.

129 பேரின் உயிர்களை காவுகொண்ட இந்த தாக்குதலுக்கு ஐ எஸ் ஆயுததாரிகள் உரிமை கோரியுள்ள நிலையில், உயிரிழந்த 117 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பாரிஸ்சின் வட பிராந்தியத்தில் இருந்து குறித்த இளைஞர் வாடகைக்கு பெற்றிருந்த காரை கண்டுபிடித்துள்ள பொலிஸார், இந்த காரை பயன்படுத்தி தாக்குதல்தாரிகள் அழைத்துவரப்பட்டிருக்கலாம் என கூறியுள்ளனர்.

பாரிஸ்சில் நடத்தப்பட்ட தாக்குதல் பெல்ஜியத்திலேயே திட்டமிடப்பட்டதாக பிரான்ஸ் பிரதமர் நேற்றுமுன்தினம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐ எஸ் ஆயுததாரிகளை தமது நாடு அழிக்கும் – பிரான்ஸ் ஜனாதிபதி சூளுரை

Monday, November 16, 2015admin
asath

Hollande-ISIS-Parisஐ எஸ் ஆயுததாரிகளை பிரான்ஸ் முற்றாக அழிக்கும் என அந்த நாட்டு ஜனாதிபதி பிரன்சுவா ஒலோன்ட் சூளுரைத்துள்ளார்.

புhரிஸ்சில் நடத்தப்பட்ட தாக்குதல்களை அடுத்து தற்போது நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரநிலைமையை மேலும் நீடிப்பதற்கான பிரேரணையை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அரசியலமைப்பு ரீதியிலான மாற்றங்களுக்கு பரிந்துரைசெய்யவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே ஈராக் மற்றும் சிரியாவில் ஐ எஸ் ஆயுததாரிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை பிரான்ஸ் விமானப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

பிரான்ஸ் தரைநகர் பாரிஸ்சின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஐ எஸ் ஆயுததாரிகள் உரிமை கோரியிருந்தனர்.

அவசர நிலைமையை பிரகடனப்படுத்தாமல் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசியலமைப்பு மாற்றங்கள் அவசியம் என நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் பிரான்ஸ் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஐ எஸ் ஆயுததாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடீமீர் புட்டீன் ஆகியோருடன் எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது எதிர்தரப்பான பஷார் அல் அசாத் சிரியாவில் அதிகாரத்தில் இருக்கின்ற போதிலும் அந்த நாட்டிலுள்ள ஐ எஸ் ஆயுததாரிகளே தமது எதிரி என பிரன்சுவா ஒலோன்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாரிஸ் தாக்குதல் :சந்தேகநபரின் விபரத்தை வௌியிட்டனர் பொலிஸார்

Sunday, November 15, 2015admin
asath

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ்சில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் தேடப்பட்டுவரும் நபரின் நிழற்படம் உள்ளிட்ட விபரங்களை அந்த நாட்டு பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

பெல்ஜியத்தை பிறப்பிடமாக கொண்ட 26 வயதான அப்டிஸ்லாம் சலாஹ் என்ற குறித்த இளைஞர் மிகவும் ஆபத்தானவர் என பிரான்ஸ் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

புhரிஸின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்திய ஏழு பேரில் இருவர் பெல்ஜியத்தில் வசித்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெல்ஜியத்தை தளமாக கொண்ட குழுவொன்றினால் தமது நாட்டில் உள்ளவர்களின் ஒத்துழைப்புடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அப்டிஸ்லாம் சலாஹ் என்ற குறித்த இளைஞர் தொடர்பான தகவல்களை கோரியுள்ள பிரான்ஸ் அதிகாரிகள், அவரை அணுக வேண்டாம் எனவும் மக்களுக்கு எச்சரித்துள்ளனர்.

புhரிஸ்சிலுள்ள கலையரங்கம், உணவகம் மற்றும் விளையாட்டரங்கம் ஆகியவற்றில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 129 பேர் பலியான நிலையில், பிரான்ஸ்சில் மூன்று நாள் தேசிய துக்கதினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Paris attack suspect

ஒரே நாளில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்வோர் ஸ்லோவெனியாவில்

Monday, October 19, 2015admin
asath
புலம்பெயர்வோரின் வருகையை கட்டுப்படுத்துவதற்காக ஹங்கேரி அதன் எல்லையை மூடியதை அடுத்து ஆயிரக்கணக்கானவர்கள் ஸ்லோவெனியாவை நோக்கிச் சென்றுள்ளனர். சுமார் 2 ஆயிரத்து 700 க்கும் அதிகமானவர்கள் ஒரே நாளில் ஸ்லோவெனியாவிற்கு சென்றுள்ளனர். சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிகளவான மக்கள் புலம்பெயர்வோர் ஐரோப்பிய நாடுகளுக்குள் தஞ்சமடைந்து வருகின்றனர். அவர்களை ஏற்பதற்கு ஜேர்மனி மட்டுமே தயாராக இருப்பதால் பலரும் ஜேர்மனியை நோக்கி செல்லும் நிலையில், அவர்கள் ஹங்கேரியின் வழியாக ஜேர்மன் செல்வதால் அவர்களை கட்டுப்படுத்துவதற்காக ஹங்கேரி செர்பியாவுடனான தங்களின் எல்லையை மூடியது. இதனையடுத்து புலம்பெயர்வோர் குரோஷியா வழியாக ஹங்கேரியினூடாக ஜேர்மனியை அடைந்த நிலையில் ஹங்கேரி செர்பியாவுடனான தனது எல்லையையும் தற்போது மூடியுள்ளது. இதன் காரணமாக குரோஷியாவிலுள்ள புலம்பெயர்வோர் ஸ்லோவெனியாவை நோக்கி செல்லும் நிலையில், ஸ்லோவெனியா குரோஷியாவில் இருந்து வரும் புகையிரத சேவையை ரத்து செய்துள்ளது. மேலும் எல்லை பாதுகாப்பு பணியில் பொலிஸாருடன் இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தங்களது எல்லையை மூடப் போவதில்லை என்றும் ஸ்லோவெனியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டு திட்டம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை

Monday, October 19, 2015admin
asath
ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டு நடவடிக்கை திட்டம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என துருக்கி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். புலம்பெயர்வோரின் வருகையை கட்டுப்படுத்தினால் துருக்கியர்களுக்கான விசாவை தாராளமயமாக்க ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி இணைவதற்கான பேச்சுவார்த்தைக்கு புதிய உத்வேகம் அளிப்பதுடன், மேலதிக உதவிகளை வழங்குவதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர். எவ்வாறாயினும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கை திட்டம், தற்போதும் வரைபு வடிவத்திலேயே உள்ளதாக துருக்கி வெளிவிவகார அமைச்சர் (Feriduh Sinirlioglu சுட்டிக்காட்டியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்ட நிதி சார்ந்த விடயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர்வோர் நெருக்கடி தொடர்பான ஐரோப்பாவின் நிலைப்பாடுகள் குறித்து துருக்கி ஜனாதிபதி ரைய்ப் எர்டோகன் முன்னர் விமர்சனம் வெளியிட்டிருந்தார். 30 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் அகதிகளை ஏற்றுக்கொள்வதாக அவர்கள் விடுக்கும் அறிவிப்பிற்கு நோபல் பரிசும் பரிந்துரைக்கப்படும் என அவர் கூறியிருந்தார். ஆத்துடன் தமது நாட்டில் இரண்டரை மில்லியன் அகதிகள் உள்ளதாகவும் அது குறித்து எந்தவொருவரும் கவனம் எடுப்பதில்லை எனவும் துருக்கி ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.

சுவிட்ஸர்லாந்தின் நாடாளுமன்ற பொது தேர்தல் இன்று

Monday, October 19, 2015admin
asath
சுவிட்ஸர்லாந்தின் நாடாளுமன்ற பொது தேர்தல் இன்று நடைபெற்று வருகின்றது. அங்குள்ள 26 மாகாணங்களிலுள்ள வாக்கு நிலையங்களில் பொது மக்கள் காலை முதல் வாக்குகளை பதிவு செய்து வருவதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுவிஸில் சுமார் 82 இலட்சம் மக்கள் உள்ள நிலையில், நாடாளுமன்ற பொது தேர்தல் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது. 246 நாடாளுமன்ற வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக வாக்களிக்கும் நிலையங்கள் மற்றும் இணையத்தளம் மூலம் பொதுமக்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று பிற்பகல் 12 மணியளவில் வாக்களிக்கும் பணிகள் நிறைவடையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிஸின் பெர்ன் நகரில் வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று இன்று மாலை 7 மணி முதல் வெற்றி பெற்ற நாடாளுமன்ற வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படவுள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்புன்படி சுவிஸ் பொதுமக்களிடம் அதிகம் செல்வாக்கு பெற்ற எஸ்விபி எனப்படும் சுவிஸ் மக்கள் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய படை பெண்களை துஷ்பிரயோகம் செய்தது ; அருட்தந்தை சக்திவேல்

Saturday, September 19, 2015admin
asath
ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பான நீதிக்கான தேடல் (The Search for Justice) என்ற புதிய ஆவணப் படம் ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் கட்டடத் தொகுதியில் …