பிரித்தானியாவில் வேலையின்மை வீதம் 7 வருடங்களின் பின் திடீர் வீழ்ச்சி

Monday, October 19, 2015admin
asath
பிரித்தானியாவின் வேலையின்மை வீதம் கடந்த 7 வருடங்களின் பின் கடந்த 3 மாதங்களில் 5.4 வீதத்தினால் குறைவடைந்துள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு வேலையின்மை வீதத் தளம்பலுடன் ஒப்பிடுகையில் மிக குறைந்த வேலையின்மை வீதம் கடந்த 3 மாதங்களில் பதிவாகியுள்ளதாக தேசிய புள்ளிவிபரவியல் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. ஜுன் மற்றும் ஓகஸ்ட் மாதங்கள் வரை 1.77 மில்லியனாக இருந்த வேலையின்மை எண்ணிக்கையில் 79 ஆயிரம் கடந்த காலாண்டில் குறைவடைந்திருக்கின்றது. பகுதி நேரம் மற்றும் முழு நேரம் பணியில் ஈடுபடும் ஊழியர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பே இதற்கான காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் 48 வருடங்களாக இருந்த பெண்ணை வெளியேறுமாறு எச்சரிக்கை

Monday, October 19, 2015admin
asath
பிரித்தானியாவில் 48 வருடங்களாக வாழ்ந்துவரும் பெண் ஒருவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் தற்போது சட்டவிரோத குடியேறியாக கருதப்படுவதாகவும், அதனால் அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டி ஏற்படலாம் எனவும் பிரித்தானிய உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது. லன்காஷயரில் – பேர்ன்லி என்ற இடத்தை சேர்ந்த வின்னி பேர்க்கின்ஹெட், 1967 இல் மலேஷியாவிலிருந்து தனது தாயுடன், பிரித்தானியாவுக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், அண்மையில் அவருக்கு உள்துறை அமைச்சகத்திலிருந்து கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றது. அதில் ஐக்கிய இராச்சியத்தில் இவர் இருப்பதற்கான அனுமதி காலாவதியடைந்துவிட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவரது குடிவரவு அந்தஷ்தை முறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் விண்ணப்பம் கிடைத்தால், கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அதில் உள்துறை அமைச்சகம் குறிப்பிடப்பட்டுள்ளது. வாகன சாரதி அனுமதி அட்டை, தேசிய சுகாதார சேவை ஆகியவற்றையெல்லாம் தான் எடுத்தபோதுகூட அதிகாரிகள் தனக்கு தெரிவிக்கவில்லை என குறித்த பெண் வினவியுள்ளார். தற்போது பிரித்தானியாவில் நிரந்தரமாக வாழ்வதற்கு அனுமதியளிக்கும் காலவரறையற்ற வதிவிட விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயன்முறை பூர்த்தியடைய 6 மாதங்கள் தொடக்கம் 12 மாதங்கள் வரை செல்லாம் எனவும் இந்தக் காலகட்டத்தில் அவருக்கு வேலை செய்ய அனுமதி இருக்காது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தான் 48 வருடங்களாக பிரித்தானியாவில் வாழ்ந்து வருவதை அதிகாரிகளுக்கு நிரூபிக்கும் முகமாக ஆதாரங்களை திரட்டி வரும் அவர் நண்பர்கள் மற்றும் அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து தனக்கு நிறைய ஆதரவு கிடைப்பதாக கூறியுள்ளார்.

வைத்தியசாலையில் பிறந்த குழந்தையை விட்டு சென்ற தாய் கண்டுபிடிப்பு

Monday, October 19, 2015admin
asath
பிரித்தானியாவில் வைத்தியசாலையொன்றில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை விட்டுச் சென்ற தாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் Harrow பகுதியில் உள்ள Northwick Park வைத்தியசாலையில் Anna Chudy என்ற பெண், மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காலையில் குறித்த பெண்ணுக்கு பூரண ஆரோக்கியத்துடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நிலையில் தன்னுடன் வந்த ஆணொருவருடன் குழந்தையை வைத்தியசாலையில் விட்டு தப்பிச் விட்டு அவர்கள் அங்கிருந்து தப்பியதாக சென்றுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வைத்தியசாலை முழுவதும் தேடிய பின்னரும் அவர்களை கண்டுபிடிக்கப்படாத நிலையில், உடனடியாக வைத்தியசாலை நிர்வாகம் பொலிஸாரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த பொலிஸார் முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் சி.சி.டி.வி கமராவில் பதிந்திருந்த அவர்களது புகைப்படத்தை வெளியிட்டு தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் இன்று காலை பாதுக்காப்பான முறையில் குறித்த பெண்ணை மீட்டுள்ளதாகவும் அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் முசலி பிரதேச மக்களை பார்வையிட்ட அரேபிய நாட்டு பிரதிநிதிகள்

Saturday, September 19, 2015admin
asath
ஆசிய நாடுகளில் இந்தியாவுக்கு அடுத்ததாக ஸ்ரீலங்காவில் கூடுதலான விபத்துக்கள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த இரண்டு மாதங்களில் இடம் பெற்ற விபத்துக்களில் சுமார் 20இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக பொலிஸ் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய படை பெண்களை துஷ்பிரயோகம் செய்தது ; அருட்தந்தை சக்திவேல்

Saturday, September 19, 2015admin
asath
ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பான நீதிக்கான தேடல் (The Search for Justice) என்ற புதிய ஆவணப் படம் ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் கட்டடத் தொகுதியில் …