ஸ்ரீலங்கா யுத்தம் தொடர்பான எரிக் சொல்ஹெய்மின் புத்தகம் நவம்பரில் வெளியீடு

Monday, October 19, 2015admin
asath
ஸ்ரீலங்காவில் நடைபெற்ற யுத்தம் தொடர்பாக நோர்வேயின் ஸ்ரீலங்காவிற்கான சமாதானத் தூதுவராக கடமையாற்றிய ஹெரிக் சொல்ஹெயிம் எழுதிய புத்தகம் அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ளது. 1983ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையிலான ஸ்ரீலங்கா யுத்தம் தொடர்பாக எரிக் சொல்ஹெயிம் தனது புத்தகத்தில் பல விடயங்களைத் தெரிவித்துள்ளார். அந்த யுத்தத்தில் நோர்வே வகித்த வகிபாகங்கள் மற்றும் சமாதான உடன்படிக்கை, அந்த ஒப்பந்தத்தின்போது இடம்பெற்றவை எனப் பல விடயங்களை அவர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிக் சொல்ஹெய்மினால் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்திற்கு சிவில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருதல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.